மும்பை:இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அனில் அம்பானியின் பல நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்துள்ளது.
அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கொடுத்திருக்கும் கடன்களை, அனில் அம்பானி கொடுத்து இருக்கும் தனிநபர் உத்தரவாதம் வழியாக வசூலித்துக் கொள்ள, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தை (NCLT - Nationl Company Law Tribunal) நாடி இருக்கிறார்களாம்.
இந்த தனிநபர் உத்தரவாதத்தின் மூலம் பெற்ற கடனின் மதிப்பு சுமார் 1200 - 1300 கோடி ரூபாய் இருக்கும் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எஸ்பிஐ வங்கியில் வீட்டிலிருந்தபடியே உடனடி சேமிப்புக் கணக்கு; ஆதார் அவசியம்!
அனில் அம்பானி தரப்பில் இருந்து "இது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் & ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் போன்ற கம்பெனிகளின் கடன். அனில் அம்பானியின் சொந்தக் கடன் அல்ல. இந்த இரு கம்பெனிகளுளின் தீர்மானத்துக்கான திட்டங்கள், கடன் கொடுத்தவர்களால் (வங்கிகளால்) மார்ச் 2020-லேயே அனுமதிக்கப்பட்டுவிட்டது.
தற்போது என்.சி.எல்.டி-யின் அனுமதிக்காக தீர்மானத்துக்கான திட்டம் கிடப்பில் இருக்கிறது" எனச் சொல்கிறார்கள். இந்த தீர்மானத் திட்டத்திலும் எஸ்பிஐ இருக்கிறது. அதான் ரெசல்யூஷன் திட்டம் இருக்கிறதே, அதற்கான அனுமதி வரட்டும் கடனை வசூலித்துக் கொள்ளலாம் என ஓயவில்லை எஸ்பிஐ.