தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ஜியோவில் முதலீடு செய்யும் 11ஆவது நிறுவனம்! - ஜியோ முதலீடுகள்

சவுதி அரேபியாவின் வெல்த் ஃபண்ட் பிஐஎஃப் (Saudi Arabia's wealth fund PIF) நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ தளத்தின் 2.32 சதவிகிதம் பங்கினை 11,367 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதுவரையில் மொத்தமாக 1,15, 693 கோடி ரூபாய், மொத்தம் 11 நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் திரட்டப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

ஜியோவில் முதலீடு செய்யும் 11ஆவது நிறுவனம்!
ஜியோவில் முதலீடு செய்யும் 11ஆவது நிறுவனம்!

By

Published : Jun 18, 2020, 9:10 PM IST

மும்பை : சவுதி அரேபியாவின் வெல்த் ஃபண்ட் பிஐஎஃப் (Saudi Arabia's wealth fund PIF) நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ தளத்தின் 2.32 சதவிகிதம் பங்கினை 11,367 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

இதன் பங்கு மதிப்பு சுமார் 4.91 லட்சம் கோடி ரூபாய். நிறுவன மதிப்பு 5.16 லட்சம் கோடி ரூபாய் ஆகும். வெல்த் ஃபண்ட் பிஐஎஃப், ஜியோவில் முதலீடு செய்துள்ள 11ஆவது நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைய வழி சந்தைப்படுத்துதலைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜியோவில், உலக நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. கடந்த சில வாரங்கள் முதல் தற்போது வரை, ஜியோ தளத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 693 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தளத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் என்ன என்பதை கீழே காணலாம்.

  1. ஏப்ரல் 22 அன்று 43,574 கோடி ரூபாயை முதலீடு செய்த ஃபேஸ்புக் நிறுவனம், அதன் மூலம் 9.99% பங்குகளை வாங்கியது.
  2. மே 4 அன்று 5,656 கோடி ரூபாய் முதலீடு செய்த சில்வர் லேக் நிறுவனம் 1.15% பங்குகளை வாங்கியது.
  3. மே 8 அன்று 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்த விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியுள்ளது.
  4. மே 17 அன்று 6,598 கோடி ரூபாய் முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34% பங்குகளை வாங்கியது.
  5. மே 22 அன்று 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது.
  6. ஜூன் 5ஆம் தேதி 9,093 கோடி ரூபாய் முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85% பங்குகளை வாங்கியது.
  7. ஜூன் 5ஆம் தேதி அன்று சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் 4,547 கோடி ரூபாய் முதலீடு செய்து கூடுதலாக 0.93% பங்குகளை வாங்கியது.
  8. ஜுன் 8ஆம் தேதி அன்று அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ 5,863.50 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1.16% பங்குகளை வாங்கியது.
  9. ஜூன் 13: டிபிஜி நிறுவனம் 4,546.80 கோடி ரூபாய் முதலீடு செய்து 0.93% பங்குகளை வாங்கியது.
  10. ஜூன் 13 அன்று எல் காட்டர்டன் நிறுவனம் 0.39 விழுக்காடு பங்குகள் மூலம் 1894.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
  11. ஜுன் 18 தற்போது சவுதியின் பிஐஎஃப் 2.32% பங்குகளை வாங்கி 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

இதையும் படிங்க :சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள்தான், ஆனால் லேபிளில் சீனாவின் பெயர் இருக்காது!

ABOUT THE AUTHOR

...view details