தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் சிபிஐ மூன்று நாள்கள் விசாரணை நடத்தியநிலையில் கொலை வழக்கில் இரண்டாவது கட்டமாக கைது செய்யப்பட்ட காவலர்களான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்து.
மேலும், இரண்டு நாள்களுக்கு பின் 3பேரின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபின் வரும் 23ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மூன்று பேரையம் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு பிறப்பித்தார்.