சாத்தான்குளம் காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு மூத்த வழக்கறிஞர்கள் அமைப்பு - Sathankulam lockup death
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த வழக்கறிஞர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு மூத்த வழக்கறிஞர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த வழக்கறிஞருமான பி.எஸ். ராமன் விடுத்துள்ள அறிக்கையில், "ஜெயராஜ் , அவரது மகன் ஃபெனிக்ஸ் ஆகியோர் காவலில் இறந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சட்டத்தின் கீழ் பணி செய்யும் எந்த ஒரு அமைப்பும், இதுபோல் காவலில் துன்புறுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட், உடல் தகுதி சான்றிதழ் அளித்த மருத்துவர், ஜெயிலர் ஆகியோர் தங்களது கடமையைச் செய்ய தவறி விட்டார்கள்.
இந்த சம்பவம் அரசு நிர்வாகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் உள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதேபோல, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறிய சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் சரவணன் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TAGGED:
Sathankulam lockup death