தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

சாத்தான்குளம் லாக்கப் மரணம்: முதலமைச்சருக்கு ஐநா அமைப்பு கடிதம்

சாத்தான்குளம் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சருக்கு ஐநாவின் அங்கீகார அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

Sathankulam custodial killing Murder case United Nations ADAP letter to CM EPS சாதான்குளம் லாக்கப் மரணம் justiceforjeyarajandfenix justiceforjeyarajandbennix
Sathankulam custodial killing Murder case United Nations ADAP letter to CM EPS சாதான்குளம் லாக்கப் மரணம் justiceforjeyarajandfenix justiceforjeyarajandbennix

By

Published : Jul 2, 2020, 6:26 AM IST

Updated : Jul 2, 2020, 2:20 PM IST

சென்னை: சாத்தான்குளம் லாக்கப் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சருக்கு ஐநா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து ஐநா வளர்ச்சி மற்றும் அமைதிக்கான அமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டு மக்களை உலக நாடுகள் வியந்து பார்க்கிறது. சமீபத்தில் தான் நேத்ரா எனும் மாணவியின் சீரிய சமூகத்தொண்டை பாராட்டி அவரை ‘ஏழை மக்களின் நல்லெண்ண தூதர்’ஆக அறிவித்து பெருமைகொண்டோம்.

அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா!

அவரின் அந்தச் செயல் உலக மன்றத்தில் தமிழ் மக்கள் மீதான் நம்பிக்கையை வளர்க்கும் வண்ணத்தில் இருந்தது. இச்சூழலில், அங்கு லாக்கப் மரணம் தொடர்பான செய்தியை அறிந்து நாங்கள் பேரதிர்ச்சி அடைந்தோம்.

முற்றிலும் கண்டிக்கதக்க இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து தலைகளையும் சட்டத்தின் முன்நிறுத்தி அந்த தாய்க்கு நீதி வாங்கித் தர வேண்டும். மேலும், அந்த குடும்பத்திற்கு தேவையான இன்னபிற உதவிகளையும் அரசு தயங்காமல் செய்து கொடுக்கவேண்டும். இது குறித்த பதில் கடிதத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது வளர்ச்சி மற்றும் அமைதிக்கான அமைப்பு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் விவகாரம்: ஆடியோ வெளியீடு!

மேலும், தமிழ்நாடு அரசு கோவிட்-19 நோய்க்கு எதிராக சிறப்பாக செயலாற்றி வருவதை அறிவோம். எங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்.

அதே நேரத்தில் லாக்கப்-இல் மரணமடைந்த ஜெயராஜ், பென்னிஸ் ஆகியோரின் குடும்பத்தினர் அமைதியுடன் தங்களின் வாழ்வை வாழ அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated : Jul 2, 2020, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details