தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறை விசாரணையின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது.
இந்நிலையில், முதற்கட்டமாக இந்த வழக்கை சிபிசிஐடி அலுவலர்கள் விசாரனை மேற்கொண்டனர். அதில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால்,சிபிஐ அலுலர்கள் இந்த வழக்கை விசாரணை நடத்திவருகின்றனர்.