சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று (ஆகஸ்ட் 17) விசாரணைக்கு வந்தது.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை திருப்தி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
அப்போது, வழக்கு விசாரணையின் தற்போதய நிலை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் சிபிஐ தாக்கல் செய்தது. அதில், தடயவியல் மற்றும் அறிவியல் சம்பந்தமான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. கரோனாவால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் சிபிஐ விசாரணை சரியான வழியில் திருப்திகரமாக உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை வகுப்பதற்காக உயர் மட்ட குழு அமைப்பது குறித்து தமிழ்நாடு அரசு கூறியது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவும், கோவில்பட்டி சிறையில் உள்ள ராஜா சிங் வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.