தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கிருமி நாசினி தெளிப்பு - Dharmapuri district news

தருமபுரி: கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தருமபுரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கிருமி நாசினி தெளிப்பு.
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் கிருமி நாசினி தெளிப்பு.

By

Published : Jun 28, 2020, 4:14 PM IST

தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தருமபுரி நகராட்சி உள்பட 33 வார்டுகளில் தொடர்ந்து நகராட்சிப் பணியாளா்கள் டிராக்டா் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

நகரப் பகுதியில் ஏழு டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. மதுபானக் கடைகள், அதை சுற்றி உள்ள பகுதிகளில் நகராட்சிப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

மதுபானக் கடைகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் வைரஸ் தொற்று பரவுவதாக புகார் எழுந்து வருவதையடுத்து மதுபானக் கடைகள் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details