கரூர் கோட்டத்திற்குட்பட்ட வேலாயுதம்பாளையம், கடம்பன், குறிச்சி, நெரூர் போன்ற காவிரி ஆற்றுப் பகுதியில் மணல் கடத்துவதாக கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், கரூர் கோட்டாட்சியர் சந்தியா இன்று (ஜூலை 5) அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
காவிரி ஆற்றில் மணல் கடத்தல் - இரண்டு லாரிகள் பறிமுதல் - Revenue divisional officer
கரூர்: காவிரி ஆற்றில் மணல் கடத்திய இரண்டு லாரிகளை கரூர் கோட்டாட்சியர் சந்தியா இன்று (ஜூலை 5) பறிமுதல் செய்தார்.
![காவிரி ஆற்றில் மணல் கடத்தல் - இரண்டு லாரிகள் பறிமுதல் Sand trucks were seized in Karur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11:40:06:1593929406-tn-krr-03-lorry-sand-issue-pic-scr-7205677-04072020144015-0407f-1593853815-652.jpg)
Sand trucks were seized in Karur
அப்போது, உரிய அனுமதியில்லாமல் காவிரி ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தார். தொடர்ந்து கரூர் கோட்டாட்சியர் சந்தியா இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.