தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரூர் ஏரியில் மண் கடத்தல்: ஒரு ஜேசிபி, மூன்று டிராக்டர்கள் பறிமுதல்! - மண் கடத்தல்

தருமபுரி: அரூர் அருகே ஏரியில், உரிய அனுமதியின்றி மண் கடத்திய ஜேசிபி இயந்திரம், 3 டிராக்டர் உள்பட 4 வாகனங்களை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Sand Theft In Dharmapuri
Sand Theft In Dharmapuri

By

Published : Jun 17, 2020, 4:08 PM IST

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி ஏரியில் ஜேசிபி இயந்திரங்கள் வைத்து, டிராக்டர் மூலம் மண் கடத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.

அதனடிப்படையில், சார் ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவின்பேரில், கொளகம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, கொளகம்பட்டி ஏரியில் ஜேசிபி இயந்திரம் மூலம் நான்கு டிராக்டர்களில் மணல் எடுக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணையில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் ஈடுபட்டபோது, மண் எடுப்பதற்கு வருவாய்த்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் இயந்திரங்கள் மூலம் மண் எடுத்ததற்காகவும், ஏரியின் நடுப்பகுதியில் மண் எடுக்காமல் கரையோரப் பகுதிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததற்காகவும், ஒரு ஜேசிபி இயந்திரம் மூன்று டிராக்டர்கள் உள்ளிட்ட 4 வாகனங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து பறிமுதல் செய்த வாகனங்களை வருவாய்த் துறையினர், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details