கரூர் மாவட்டம் வெங்கமேடு காவல் நிலைய பகுதிக்கு உள்பட்ட பஞ்சமாதேவி பகுதியில் அமைந்துள்ள அமராவதி ஆற்றின் தடுப்பணை பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அமராவதி ஆற்றில் மணல் திருட்டு - இரண்டு மாட்டு வண்டிகள் பறிமுதல் - Sand stolen in Amravati River
கரூர்: அமராவதி ஆற்றில் மணல் திருட பயன்படுத்திய இரண்டு மாட்டு வண்டிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்து, தப்பியோடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Sand stolen in Amravati River
அதனடிப்படையில் வெங்கமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தவர்கள் காவல் துறையினரை கண்டவுடன் தப்பித்து ஓடினர்.
மேலும் அவர்கள் மணல் திருட்டுக்காக பயன்படுத்திய இரண்டு மாட்டு வண்டிகள் ஒன்றரை யூனிட் மணல் உள்ளிட்டவற்றை வெங்கமேடு காவல் துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பி ஓடியவர்களை தேடிவருகின்றனர்.