ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியா தரப்பிலிருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. சில மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சூட்டில் மதியழகன் படுகாயம் அடைந்தார்.
சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் - சேலம் மாவட்ட செய்தி
சேலம் : காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சேலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார்.

salem soldier died in Kashmir
இதனையடுத்து, அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மதியழகன் சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகாவில் உள்ள ஸ்ரீரங்காய் காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும், பணியில் வீர மரணம் அடைந்த மதியழகனின் உயிர் தியாகத்தை நாடு மறக்காது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளர்.