சேலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல்வேறு உள் கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியின் மூலமாக மாநகரப் பகுதியில் உள்ள அடிப்படை கட்டமைப்புகளை, நவீன தொழில் நுட்பத்துடன் நவீன வசதிகளுடன் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வழிமுறைகளை வகுத்துள்ளது.
இதனையடுத்து சேலம் பகுதியில் இயங்கி வரும் காய்கறிக் கடை, பூக்கடை உள்ளிட்ட சேலம் மாநகராட்சி சார்பில் இயங்கும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நவீனமயமாக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலத்தில் இயங்கிவரும் வ. உ.சி. மார்க்கெட் பகுதியில் 260க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தற்போது, நவீன வசதிகளுடன் கூடிய மார்க்கெட் அமைக்கப்படவுள்ளதால், அந்தப் பகுதியில் இயங்கி வந்த 260 பூக்கடைகள் அடங்கிய தற்காலிகக் கடை அமைக்கும் பணி, சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அதனை சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் நேரில் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்திட அறிவுறுத்தினார்.
மேலும், அம்மாபேட்டை மண்டலம் கோட்ட சீர்மிகு திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில், நவீன முறையில் புதிய வ.உ.சி. மார்க்கெட் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.