புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு தருமபுரி உழவர் சந்தையில் காய்கறி விலை உயர்ந்து விற்பனையானது.
தருமபுரி உழவர் சந்தைக்கு இன்று 90 விவசாயிகள் 54 வகையான காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு தருமபுரி உழவர் சந்தையில் காய்கறி விலை உயர்ந்து விற்பனையானது.
தருமபுரி உழவர் சந்தைக்கு இன்று 90 விவசாயிகள் 54 வகையான காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
தக்காளி கிலோ 18 ரூபாயாகவும், கத்தரிக்காய் 24 ரூபாயாகவும், வெண்டைக்காய் கிலோ 35 ரூபாய்க்கும், அவரை கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி 12 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 60 ரூபாய்க்கும், அளவு பச்சை மிளகாய் 38 ரூபாய்க்கும், புடலங்காய் கிலோ 12 ரூபாய்க்கும், சுரைக்காய் கிலோ 10 ரூபாய்க்கும், பூசணிக்காய் கிலோ 24 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று உழவர் சந்தையில் 43 டன் காய்கறிகள் பதிமூன்று லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.