கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குள்பட்ட தோகைமலை அருகே சிவாயம் ஊராட்சி அலங்காரப்பட்டி கிராமத்திற்குச் சொந்தமான முப்பனக்கட்சி மந்தையின் சலை எருது என்றழைக்கப்படும் 24 வயது உடைய கோயிலுக்குச் சொந்தமான சுவாமி எருதை பொதுமக்கள் பராமரித்துவந்தனர்.
இந்தச் சலை எருது பல்வேறு மாலை தாண்டும் போட்டிகளில் கலந்துகொண்டு, கட்டில் பீரோ, தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், வயது மூப்பால் கடந்த ஒரு ஆண்டு காலமாக உடல்நிலை சரியில்லாமல் அவதியுற்று வந்தது.