நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை பகுதியை சேர்ந்தவர் விவசாயி பூபதி. அதேப்பகுதியில் இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இன்று பூபதி தோட்டத்திற்கு சென்றபோது விவசாய கிணற்றிலிருந்து பறவையின் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தபோது மயில் ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு - மயிலை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே கபிலர் மலையில் 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்
![கிணற்றில் தவறி விழுந்த மயில் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:09:13:1595403553-tn-nmk-03-paramathivelur-peacock-well-script-vis-7205944-22072020125322-2207f-1595402602-1073.jpg)
70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த மயில் பத்திரமாக மீட்பு
உடனே இது குறித்து அவர் வேலாயுதபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கயிறு கட்டி உள்ளே இறங்கி மயிலை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தோட்டத்துப் பகுதியில் இரைத்தேடி வந்த மயில் வழித்தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.