தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

எல்லை அருகே பறந்த  விமானங்கள் : மாறி மாறி பழி சுமத்திக் கொள்ளும் அமெரிக்க, ரஷ்ய நாடுகள்

ரஷ்ய எல்லைப் பகுதியை நோக்கி கருங்கடலில் பறந்து கொண்டிருந்த மூன்று அமெரிக்க விமானங்களின் காணொலிக் காட்சிகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

எல்லை அருகே பறந்த  விமானங்கள்: மாறி மாறிப் பழி சுமத்திக்கொள்ளும் அமெரிக்க -ரஷ்ய
எல்லை அருகே பறந்த  விமானங்கள்: மாறி மாறிப் பழி சுமத்திக்கொள்ளும் அமெரிக்க -ரஷ்ய

By

Published : Jun 28, 2020, 5:35 PM IST

இது குறித்து ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த வெள்ளிக் கிழமை அமெரிக்க விமானங்களில் ஆர்.சி -135 உளவு விமானம், பி - 8 போஸிடான் மற்றும் கே.சி -135 வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஆகியவை ரஷ்ய எல்லையை நெருங்கியது.

இதற்கு ரஷ்ய தரப்பு குறுக்கீடு செய்த பின்னர் அமெரிக்க விமானங்கள் ரஷ்யாவின் எல்லையிலிருந்து விலகிச் சென்றன. ரஷ்ய போர் விமானங்கள் அனைத்து சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இரண்டு ரஷ்ய விமானங்கள், அமெரிக்காவின் எல்லைப் பகுதியான அலிஸ்காவின் அலுடியன் யுனிமாக் தீவின் 50 மைல் (80 கிலோமீட்டர்) தூரத்திற்குள் வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற இடையூறு சம்பவம் இந்த மாதத்தில் ஐந்தாவது முறையாக நடைபெற்றுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டில் ரஷ்யா நீண்ட தூர விமான சேவைகளைத் தொடங்கியதில் இருந்து, ஆண்டுக்கு சராசரியாக ஏழு இடைமறிப்பு சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன என்று வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க :கர்தார்பூர் வழித்தட விவகாரத்தில் பாகிஸ்தான் போலியான நல்லிணக்கம் காட்டுகிறது - இந்தியா

ABOUT THE AUTHOR

...view details