தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகளுக்கான புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா , மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆகியோர் இன்று நாகுடி பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க சிறப்பு தூர்வாரும் பணியினை கண்காணிக்கும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுவரும் ஆள் இல்லா சிறு விமானம் மூலம் அளவீடு செய்யும் தொழில்நுட்பக் கருவியின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர் சிறப்பு தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகளைப் பற்றி புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு தூர்வாரும் பணிகள் என்ற உன்னத திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டிற்கான சிறப்பு தூர்வாரும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதன்படி நாகுடி பகுதியில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.