திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஆதிச்சபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (45) இவர் நீடாமங்கலம் அருகேவுள்ள கற்கோவில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சொந்த வீடு கட்டுவதற்காக
மன்னார்குடி கடைவீதியில் இயங்கி வரும் பரோடா வங்கியிலிருந்து கடனாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி அதனை தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கண்ணனை திசை திருப்பி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றார். இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி கயல்விழி உத்தரவின்பேரில் தனிப்படை காவல் துறையினர் வங்கியிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வேளாங்கண்ணியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.