ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில்உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். நடப்பு பங்குனி மாதத்திற்கான உண்டியல் திறப்பு இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் ரூ.23 லட்சம் காணிக்கை - மதுரை மாவட்டம் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து ரூபாய் 22 லட்சத்து 62 ஆயிரம் ரொக்கமும், 120 கிராம் தங்கமும், 1 கிலோ 500 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் கோவிலில் ரூ.23 லட்சம் உண்டியல் வரவு
அப்போது அதில் 22 லட்சத்து 62 ஆயிரத்து 217 ரூபாய் ரொக்கமாகவும், 120 கிராம் தங்கமும்,1 கிலோ 500 கிராம் வெள்ளியும் இருந்தது.
இதில் திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் இராமசாமி, உண்டியல் கண்காணிப்பு செயல் அலுவலர் அனிதா, திருப்பரங்குன்றம் சரக அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியலை எண்ணும் பணியில் ஈடுபட்னர்.