பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குடும்ப பிழைப்பிற்காக பூக்கடை, பழக்கடை, செருப்புத் தைக்கும் தொழிலாளிகள், மீன் கடை, பலகாரக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
தரைக்கடை வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்த ஊராட்சி நிர்வாகம் - பெரம்பலூர் மாவட்டத்தில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஊராட்சி நிர்வாகம் பணம் வசூழ் செய்கின்றனர்
பெரம்பலூர்: பாடாலூர் அருகே சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் ஊராட்சி நிர்வாகம் கட்டாயப்படுத்தி வாடகை வசூல் செய்வதாக கூறி தரைக்கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஆட்சியரிடம் மனு அளித்த வியாபாரிகள்
இதனிடையே இத்தனை ஆண்டு காலமாக கடை நடத்திவருபவர்களிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு வாடகையும் வசூல் செய்யவில்லை. ஆனால், தற்போது ஒவ்வொரு கடைக்கும் 50 ரூபாய் என வாடகை வசூலிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தாங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக கடை நடத்திவருவதாகவும், தங்களிடம் ஊராட்சி நிர்வாகம் அடாவடியாக வாடகை வசூல் செய்வதாகவும் கூறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.