தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

திருமழிசை தற்காலிக சந்தையில் சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்! - திருமழிசை சந்தையில் சாலைகள் அமைக்கும் பணி

திருவள்ளூர்: திருமழிசை தற்காலிக சந்தையில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருமழிசை தற்காலிக சந்தையில் சாலைகள் அமைக்கும் பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர்
திருமழிசை தற்காலிக சந்தையில் சாலைகள் அமைக்கும் பணி தீவிரம் - மாவட்ட ஆட்சியர்

By

Published : Jul 23, 2020, 8:40 PM IST

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் செயல்பட்டு வரும் கோயம்பேடு தற்காலிக சந்தையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது.

இதனால் வியாபாரிகள் மிகவும் அவதிப்பட்டனர். எனவே இந்தப் பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திருமழிசை தற்காலிக சந்தை மழை நேரங்களில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. அதனை சமாளிப்பது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுப்பணித்துறை மூலம் மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. பின்பகுதியில் உள்ள கடைகளை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று முன் வரிசையில் சாலை ஓரங்களில் விரைவில் வியாபாரத்திற்கு ஏற்றாற்போல் அமைத்து தரப்படும்.

இங்கு வருபவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, முகக் கவசங்கள் அணிவதையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் 26 பரிசோதனை வாகனங்களில் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details