தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டம் - அரசு போக்குவரத்து ஊழியர்கள்

கன்னியாகுமரி: குமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் கடந்த ஒரு வருடமாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு எந்தவித பலன்களும் வழங்காததை கண்டித்து எம்எல்ஏக்கள், எம்பி தலைமையில் நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Retired Government Transport Employees protest

By

Published : Jul 14, 2020, 1:28 AM IST

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஓராண்டாக எந்தவிதமான ஓய்வுதிய பலன்களும் வழங்கப்படவில்லை. மேலும், இதேபோன்று அவர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பு ஊதியம் வருங்கால வைப்பு நிதி போன்ற பண பலன்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவையில் உள்ளது.

இதனை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நாகர்கோவில் ராணி தோட்டத்தில் உள்ள அரசு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் குமரி தொகுதி எம்பி வசந்தகுமார், குளச்சல், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details