தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ஐயர் வயது 87. அவர் தற்பொழுது நாச்சியார் கோயில் உத்திராபதி மடத்தின் பவர் ஏஜெண்ட் பொறுப்பாளராக உள்ளார்.
இந்நிலையில் கோபால் ஐயர் அவரது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த போது திடீரென வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயமடைந்த கோபால் ஐயர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நாச்சியார்கோவில் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.