தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ளது புகழ்பெற்ற சார்மினார் கட்டடம். இது 1591ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த முகமது குலி குதூப் என்பவரால் கட்டப்பட்ட சுண்ணாம்பு கட்டடம் ஆகும். சுமார் 428 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சார்மினார் விரைவில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்! - தொல்லியல் துறை நிபுணர்கள்
ஹைதராபாத்: சார்மினாரின் நான்கு தூண்களில் ஒரு தூணின் பாகமொன்று சேதமடைந்ததை விரைவில் சீரமைக்கும் பணிகள் தொடங்கும் என தொல்லியல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
![சார்மினார் விரைவில் மறுசீரமைப்புப் பணிகள் தொடக்கம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3188688-thumbnail-3x2-sar.jpg)
இந்நிலையில் இடிந்து விழுந்த பகுதியை இன்று தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இதில் 2 மீட்டர் நீளமும், 88 சென்டிமீட்டர் அகலம் கொண்ட பகுதி இடிந்து விழுந்துள்ளது தெரியவந்தது. மேலும் இடிந்து விழுந்த பகுதியை தொன்மை மாறாமல் அப்போது பயன்படுத்திய சுண்ணாம்புக் கலைவையை கொண்டு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிமெண்ட கலவை கொண்டு கட்டினால் 24 நான்கு மணி நேரத்தில் உறுதியாகும். ஆனால் சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்படுவதால் உறுதியாவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும். ஆகவே பணிகள் முடிய இரண்டு மாதங்கள் ஆகும் எனவும், விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என தொல்லியல் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2010ஆம் ஆண்டு பெய்த கனமழையின்போது சார்மினாரின் சில பகுதிகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.