மேலும், பிலாந்தஸ் செடிகளிலான அழகான பூங்காவும் உள்ளது. இங்குள்ள சிறார் விளையாட்டு உபகரணங்கள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளன.
ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் திற்பரப்பு அருவியின் சிறுவர்கள் பூங்கா புதுப்பொலிவு! - புதுப்பொழிவு செய்யப்பட்ட சிறுவர் பூங்கா
கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சிறுவர்கள் பூங்கா 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பொலிவு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பொலிவுடன் காணப்படும் பூங்கா
திற்பரப்பு அருவியின் அருகே சிறார்களை மகிழ்விப்பதற்காக நீச்சல் குளம், ராட்டினங்கள், ஊஞ்சல்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.
இந்நிலையில், பேரூராட்சி பொது நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்போது புது வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக சிறுவர்கள் புகுந்து வெளியே வரும் திகில் நிறைந்த குகை வடிவில் குழாய்கள் கொண்ட விளையாட்டு, சைக்கிளில் மிதிப்பது போல் வட்டமாய் சுற்றிவரும் உபகரணமும், சுவர்களில் வண்ணச் சித்திரங்களும் வரையப்பட்டுள்ளன.