டெல்லி:அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் எல். கேட்டர்டான் நிறுவனம் ஜியோவில் ரூ.1894.50 கோடி முதலீடு செய்து, 0.39 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ திகழ்கிறது. ஜியோமார்ட் என்ற பெயரில் இணையவழி வர்த்தகத்திலும் களமிறங்கியது. இச்சூழலில் சில வாரங்களாக உலகின் முன்னணி நிறுவனங்கள் ஜியோவில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.
அந்த வகையில் முன்னணி நுகர்வோர் தயாரிப்புகளில் அதிக முதலீடுகளை செய்த எல். கேட்டர்டான் நிறுவனம் ரூ.1,894.50 கோடி ஜியோவில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோவில் 0.39 விழுக்காடு பங்குகளை அந்நிறுவனம் வாங்கியுள்ளது.
இதன் பங்கு மதிப்பு சுமார் ரூ. 4.91 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன மதிப்பு ரூ. 5.16 லட்சம் கோடியாகவும் இருக்கிறது. இது ஜியோவில் முதலீடு செய்த 10ஆவது நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையவழி சந்தைப்படுத்துதல் என்பதை கருத்தில்கொண்டு முன்னணி நிறுவனமான ஜியோவில், உலக நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் ஜியோ நிறுவனத்தில் ரூ.1 லட்சத்து 4,326.65 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க பேடிஎம்-இன் போஸ்ட்பெய்டு கடனுதவி!
ஜியோவில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள்:
- ஏப்ரல் 22: ரூ. 43,574 கோடியை முதலீடு செய்த ஃபேஸ்புக் (Facebook) நிறுவனம் 9.99% பங்குகளை வாங்கியது.
- மே 4: ரூ. 5,665.75 கோடி முதலீடு செய்த சில்வர் லேக் (Silver Lake) நிறுவனம் 1.15% பங்குகளை வாங்கியது.
- மே 8: ரூ. 11,367 கோடி முதலீடு செய்த விஸ்டா நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது.
- மே 17: ரூ. 6,598.38 கோடி முதலீடு செய்த ஜெனரல் அட்லாண்டிக் 1.34% பங்குகளை வாங்கியது.
- மே 22: ரூ. 11,367 கோடி முதலீடு செய்த கேகேஆர் நிறுவனம் 2.32% பங்குகளை வாங்கியது.
- ஜூன் 5: ரூ. 9,093.60 கோடி முதலீடு செய்த முபாதலா நிறுவனம் 1.85% பங்குகளை வாங்கியது.
- ஜூன் 5: சில்வர் லேக் நிறுவனம் மீண்டும் ரூ. 4,546 கோடி முதலீடு செய்து கூடுதலாக 0.93% பங்குகளை வாங்கியது.
- ஜூன் 8: அபுதாபி நிறுவனமான ஏடிஐஏ, ரூ. 5,863.50 கோடி முதலீடு செய்து, 1.16% பங்குகளை வாங்கியது.
- ஜூன் 13: டிபிஜி நிறுவனம் ரூ. 4,546.80 கோடி முதலீடு செய்து 0.93% பங்குகளை வாங்கியது.