நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 70 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 3 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் வரை விற்கப்பட்டது.
இந்நிலையில், முட்டை நுகர்வு குறைந்து விற்பனை சரிவடைந்தது. அதிக அளவு தேக்கம் ஏற்பட்டதால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், கடந்த மாதம் 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 90 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதே விலை நீடித்த நிலையில், இன்று (ஜூலை 4) மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.