திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு கிராமத்தில் பழமை வாய்ந்த அரகாத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் நடுவே உள்ள குளத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதந்துள்ளது.
இதைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதிரிவேடு காவல்துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.