தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் எவ்வளவு? வெளியிடும் ரிசரவ் வங்கி - Business news in tamil

இந்நாளில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் அடுத்தடுத்த வேலை நாள்களில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையிடல் முறைகள் அமைக்கப்பட்டவுடன், அட்டைகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் தரவுகளும் தினமும் வெளியிடப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

RBI
RBI

By

Published : Jun 5, 2020, 4:05 PM IST

Updated : Jun 5, 2020, 5:32 PM IST

மும்பை: நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ் மற்றும் யுபிஐ போன்ற பல்வேறு பரிவர்த்தனை முறைகள் மற்றும் ஏடிஎம்களில் இருந்து பணம் பெறுதல் ஆகியவற்றின் மொத்த கணக்கு தினமும் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஜூன் 3 பரிவர்த்தனைகளின்படி, மக்கள் ஏடிஎம்களில் இருந்து ரூ.4,426.92 கோடி பணத்தையும், மைக்ரோ ஏடிஎம் / வங்கி நிருபர்கள் மூலம் ரூ.668.88 கோடியையும் பெற்றுள்ளனர். ரூ.3,30,632.89 கோடி மதிப்புள்ள 4.3 லட்சம் ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனைகளும், 62,985.75 கோடி ரூபாய் மதிப்பில் 100.36 லட்சம் நெஃப்ட் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது.

மேலும், ரூ.456.26 லட்சம் யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.9,622.38 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. ஐ.எம்.பி.எஸ் அடிப்படையிலான பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ .7,653.71 கோடியாக இருந்தது.

"தினமும் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் அடுத்தடுத்த வேலை நாள்களில் வெளியிடப்படும்" என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Last Updated : Jun 5, 2020, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details