தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டம்! கடன் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை!

கரோனா நோய்க் கிருமித் தாக்கத்தை தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடத்தும் முதல் இயக்குநர் குழுக் கூட்டம் ஜூன் 26ஆம் தேதி நடந்தது.

By

Published : Jun 26, 2020, 10:30 PM IST

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

கரோனா நோய்க் கிருமித் தாக்கத்தை தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடத்தும் முதல் இயக்குநர் குழுக் கூட்டம் ஜூன் 26ஆம் தேதி நடந்தது. இந்த மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தை, அதன் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தலைமை தாங்கி நடத்தினார். மொத்த கூட்டமும் காணொலி காட்சி மூலம் நடந்தது.

இக்கூட்டத்தில், ஏற்கனவே கொடுத்து இருக்கும் கடன்களை மறு சீரமைப்பது குறித்தும், கடன் வாங்கியவர்களுக்கு ஏதாவது நன்மை இருக்கும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தொழில் துறையினர்கள் தொடங்கி, தனி நபர்கள் வரை பலரும் இதை ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.

ஏற்கனவே கடன் தவணைகளைச் திருப்பிச் செலுத்துவதை ஆறு மாதங்கள் வரை ஒத்திவைக்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்து இருப்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது. ஆனால், கரோனா நோய்க் கிருமி பரவாமல் இருக்க, மத்திய அரசு அறிவித்த கடுமையான பொது முடக்கத்தால் வணிகங்கள் சரிவர நடைபெற வில்லை.

ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு கூட, வேலை பறி போனது. எனவே, கடன் தவனைகளை ஒத்திவைக்க அனுமதித்தது எல்லாம் போதாது என்பது போல, கடன் மறு சீரமைப்பை பல தரப்பினர்களும் பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றமே விடையாகக் கிடைத்து இருக்கிறது. கடன் மறு சீரமைப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

இந்த மத்திய ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டத்தில், தற்போதைய பொருளாதார நிலவரம், கரோனாவால் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பொருளாதார தாக்கங்களைக் குறித்தும் விரிவாக அலசப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதியாண்டு எப்படி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 வரை இருக்கிறதோ, அதே போல மத்திய ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரை இருக்கும்.

தற்போது நடந்து கொண்டு இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், அடுத்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை என்பன போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details