தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த ரேஷன் கடை ஊழியர்கள் - திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர்: கரோனா நேரத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களை கரோனா மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து கடை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்
ரேஷன் கடை ஊழியர்கள் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்

By

Published : Jun 17, 2020, 1:37 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருள்கள் 100 விழுக்காடு வழங்க வேண்டும். மேலும் சர்க்கரை, அரிசி, பாமாயில், துவரம் பருப்பு, ஆகியவைகளுக்கு 100 விழுக்காடு ஒதுக்கீடுசெய்ய வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் சரியான அளவில் தரமானதாக வழங்க வேண்டும்.

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் மே மாதத்திற்கான ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. கரோனா நேரத்தில் வழங்கப்பட்ட விற்பனையாகாத 500-க்கான தொகுப்புகளை நிர்வாகம் திருப்பி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் கட்டாயப்படுத்தி கட்டுப்பாடற்ற பொருள்களை நியாயவிலைக் கடைகளில் இறக்குவது தவிர்க்க வேண்டும் .இவ்வாறு இறக்கப்பட்ட பொருள்களைத் திரும்பப் பெற வேண்டும்.

கரோனா காலத்தில் சாலை விபத்தில் மரணமடைந்த பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக நியாயவிலைக் கடைகளில் இன்றுமுதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details