கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மாவட்டத்தின் கரோனா பாதிப்பு நிலவரங்களை தெரிவித்தார்.
அப்போது, வேலை காரணமாக சென்னைக்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகளவில் உள்ளதால் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஏற்கனவே 25 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தபடும் எனவும் கூறினார்.