உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அரசு அலுவலர்களுடன் கரோனா தொற்று குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என இலக்கு தெரிவித்துள்ளதாக மாநில கூடுதல் தலைமைச் செயலர் அவ்னிஷ் குமார் அவஸ்தி தெரிவித்தார்.
கரோனா பரிசோதனை குறித்து யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயம்! - கரோனா பரிசோதனை
லக்னோ: நாள்தோறும் ஒரு லட்சம் கரோனா பரிசோதனை செய்யவேண்டுமென அரசு அலுவலர்களிடம் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2, 712 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,711ஆக உள்ளது என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என இலக்கு வைத்துள்ளார். மேலும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்துக்கும் மேலான பரிசோதனைகளும், மற்ற மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேலான சோதனையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்" என்றார்.