கரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடைகாலம் முடிந்து 83 நாள்களுக்குப் பிறகு நேற்று (ஜூன் 13) பாம்பன், மண்டபம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், 1300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இறால் மீன்பிடி ஏற்றுமதியாளர்கள் கோரிக்கையை ஏற்று 24 மணி நேர மீன்பிடியை 12 நேரமாக மாற்றிக்கொண்டு மீன்பிடிக்கச் சென்று இன்று காலை மீனவர்கள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் திரும்பினர். ஆனால், மீனவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு மீன் கிடைக்கவில்லை என்று மீனவர்கள் ஏமாற்றத்துடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் ஜேசு ராஜா கூறுகையில், "இந்த ஆண்டு ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று 12 மணி நேரம் மீன் பிடிக்க மீனவர்கள் அனைவரும் நேற்று சென்று இன்று காலை வந்தோம். போதிய அளவு மீன் கிடைக்கவில்லை. ஒரு விசைப் படகிற்கு 150 முதல் 200 கிலோ வரையே சராசரியாக இறால், நண்டு, உள்ளிட்ட மீன் வகைகள் கிடைத்துள்ளன.