12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 53ஆவது லீக் போட்டி, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
டெல்லி பந்துவீச்சில் சுருண்ட ராஜஸ்தான்! - அமித் மிஷ்ரா
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்களை எடுத்தது.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, டெல்லி அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், அந்த அணியின் இளம் வீரர் ரியன் பராக்கின் பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்களை எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரியன் பராக், நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 50 ரன்களுடன் ஆட்டமிழந்தார். டெல்லி அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.