தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

தமிழ்நாட்டில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் - Rain Updates

சென்னை: தமிழ்நாட்டில் ஓரிரூ மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rainfall in Tamil Nadu - Meteorological Center
Rainfall in Tamil Nadu - Meteorological Center

By

Published : Apr 24, 2021, 1:44 PM IST

மகாராஷ்டிரா முதல் தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிவரை நிலவும் (1.0 கிலோமீட்டர் உயரம்வரை ) வளிமண்டல சுழற்சி காரணமாக ஏப்ரல் 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, கரூர், நாமக்கல், திருச்ச, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், தென்காசி, கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழையும்.

தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த மணி 24 நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த மணி 48 நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் (Relative Humidity) 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் , தர்மபுரியில் தலா 6 செ.மீ., நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டம், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி தலா 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

ABOUT THE AUTHOR

...view details