தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

CWC19: தென்னாப்பிரிக்காவை காப்பாற்றுமா மழை? - வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா

சவுதாம்டன்: வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டியில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

vCWC19: தென்னாப்பிரிக்காவை காப்பாற்றுமா மழை?

By

Published : Jun 10, 2019, 9:05 PM IST

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 15ஆவது லீக் போட்டி சவுதாம்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, தென்னாப்பிரிக்கா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹசிம் ஆம்லா, ஆறு ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த மார்க்ரம் வந்த வேகத்திலேயே ஐந்து ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து, தென்னாப்பிரிக்கா அணி 7.3 ஓவர்களில் 29 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் எடுத்து இருந்தது. இந்நிலையில், மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. டி காக் 17 ரன்களுடனும், கேப்டன் டூ ப்ளஸில் ரன் ஏதும் எடுக்காமலும் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் காட்ரெல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஆம்லாவின் விக்கெட்டை கைப்பற்றி மகிழ்ச்சியில் காட்ரெல்

மூன்று மணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்துவருவதால், ஆட்டம் மீண்டும் தொடங்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணி இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, இன்னும் ஒரு வெற்றிக் கூட அடையாமல் உள்ளது. மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளது.

இதனால், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிச்சயம் வெற்றிபெற்றே தீரே வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சமயத்தில், தென்னாப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியமால் திணறிவருகிறது. இதனால், அவர்களது தோல்வியை மழை காப்பாற்றுமா என அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details