ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாடு முழுவதும் மார்ச் 21ஆம் தேதி முதல் ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மார்ச் 21ஆம் தேதி முதல் ஜுன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ரயில்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்து, பயணம் மேற்கொள்ளமுடியாதவர்களின் கட்டணம் திருப்பித் தரப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருந்தது.