2019ஆம் ஆண்டுக்கான ரோம் ஓபன் டென்னிஸ் தொடர் இத்தாலியின் தலைநகர் ரோம்-இல் நடைபெற்றது. இதில், ஆடவர் ஒற்றயைர் பிரிவு இறுதிப் போட்டியில், இரண்டாம் நிலை வீரரும், ஸ்பெயின் வீரருமான ரஃபேல் நடால், முதல் நிலை வீரரும், செர்பியாவின் நட்சத்திர வீரருமான ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.
'இங்க நான்தான் கிங்' - மீண்டும் நிரூபித்த நடால்! - ரஃபேல் நடால்
ரோம் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் நட்சத்திர வீரர் நடால், செர்பிய வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
டென்னிஸ் போட்டியில் இரு ஜாம்பவான்கள் நேருக்குநேராக மோதிய இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிகளவில் திரண்டனர். இதைத்தொடர்ந்து, முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்தி விளையாடிய நடால் 6-0 என்ற கணக்கில் அந்த செட்டை வென்றார். இதைத் தொடர்ந்து, இரண்டாவது செட்டில் நடால் 4-6 என்ற கணக்கில் ஜோகோவிச்சிடம் போராடி தோற்றார்.
இதனால், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் போட்டியில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நடால் 6-1 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம், நடால் 6-0, 4-6, 6-1 என்ற கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.இதன் மூலம், நடால் 9ஆவது முறையாக இத்தாலி ஓபன் பட்டத்தை வென்று இங்கு நான் தான் ராஜா என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்.