தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

புதுக்கோட்டையில் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் - ஓட்டுநர் கைது - புதுக்கோட்டையில் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

புதுக்கோட்டை: லோடு ஆட்டோவில் 1,050 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற ஓட்டுநரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு  அலுவலர்கள் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்
ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தல்

By

Published : Jun 6, 2020, 4:49 AM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கல்லூர் பள்ளத்தூர் சாலையில் பறக்கும் படை தாசில்தார் தமிழ் மணி தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலர்கள், திருமயம் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திக், உதவி ஆய்வாளர் வைரம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சமுத்திர பட்டியிலிருந்து நம் பூரணிப்பட்டி வழியாக வந்த மூன்று சக்கர லோடு ஆட்டோ வினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பொதுவிநியோக திட்ட ரேஷன் அரிசி 21 மூட்டைகள் இருந்தன. அதன் எடை 1, 050 கிலோ ஆகும்.

இதனை பறிமுதல் செய்த அலுவலர்கள் நம்பூரணிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஓட்டுநர் அருணாச்சலம் (45 ) என்பவரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சத்தம் போட்டு காட்டிக்கொடுக்கும் சிசிடிவி கேமரா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details