தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்கிறது. மக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.
புதுச்சேரியின் சுற்றுலா தலமான கடற்கரை சாலை, படகு துறை, அருங்காட்சியகம், தாவரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறந்து இருக்கும். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு தொடரும்” என்றார்.