தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

கரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இஸ்லாமிய தொண்டு நிறுவனத்திற்கு ஒப்புதல்!

புதுச்சேரி: கரோனா நோயால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இஸ்லாமிய தொண்டு நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Corona cases pondicherry
Pondicherry news

By

Published : Jun 11, 2020, 6:21 PM IST

புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்யும்போது அவமரியாதையாக உடலை பள்ளத்தில் தள்ளிவிட்டு அடக்கம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக செய்தி பரவியது தொடர்பாக புதுச்சேரி அரசு மூன்று ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தது.

இதனிடையே புதுச்சேரியில் கரோனாவால் இறக்கும் நோயாளியின் உடலை தொண்டு நிறுவனம் மூலம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தொண்டு அமைப்பினர் இறந்தவர்களின் உடலை பெற்று அடக்கம் செய்ய புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரினர் அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி கோட்டகுப்பம் அகமது அலி, சுல்தான்பேட்டை ரவிக்குமார் ஆகியோரின் தொண்டு நிறுவனத்துக்கு அடக்கம் செய்வதற்கான ஒப்புதல் ஆணையை உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி நேற்று வழங்கினார்.

இதற்கான நகல் உள்ளாட்சித்துறை செயலர் மாவட்ட ஆட்சியர், ஜிப்மர் மருத்துவ அலுவலர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் உயிரிழக்கும் நபர்களின் உடலை அடக்கம் செய்ய பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள் தயங்கிவரும் நிலையில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் இதை ஏற்றுக் கொண்டதற்கு பல்வேறு அமைப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று உயிரிழந்த புதுச்சேரி கரோனா நோயாளி உடலை முழு பாதுகாப்பு உடையுடன் அரசு அறிவுறுத்தலின்படி இந்த தொண்டு நிறுவனத்தினர் அடக்கம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details