நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று அச்சம் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில் தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் பொது போக்குவரத்து ஜூன் 15ஆம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் இயக்கப்பட்டு வந்த 100 அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவில்லை. அதேபோல தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை.