ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டை 2,500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டுவருகிறது. இந்தத் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன.
தொழிற்பேட்டையைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில், தொழிற்பேட்டையில் செயல்பட்டுவரும் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய டயர்களை எரிக்கும் தொழிற்சாலையிலிருந்து மாலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை மட்டும் நாள்தோறும் கரும்புகையினை வெளியிட்டுவருகிறது.
இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சுத்திணறல், வாந்தி, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக, தொழிற்சாலை நிர்வாகத்தினரிடமும், தொழிற்பேட்டை நிர்வாகத்திடமும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.