கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவக் கல்லூரியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வார்டு ஒன்றை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி இந்த சிகிச்சை மையத்தை அமைக்க கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் 140 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். மேலும் ஏராளமான முதியவர்களும் குழந்தைகளும் உள்ளனர்.
இந்தப் பள்ளியில் கரோனா சிகிச்சை மையம் அமைவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதனால், பொதுமக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். எனவே இதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்றனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் இரட்டை மரணம்: காவலரிடம் அச்சுறுத்தலை எதிர்கொண்ட நீதித்துறை நடுவர்!