திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே துங்காவி ஊராட்சியில் பாறையூர், சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஊராட்சிக்கு திருமூர்த்திமலை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக, குடிநீர் சரிவர விநியோகிக்காமல் இருந்ததால், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
குடிநீர் திட்ட ஜெனரேட்டருக்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் - Water generators
திருப்பூர்: உடுமலை அருகே துங்காவி ஊராட்சியில் செயல்படாத கூட்டுக் குடிநீர் திட்ட ஜெனரேட்டருக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
இது குறித்து அலுவலர்களுக்குப் பலமுறை புகார் அளித்தும்; எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீர் சரிவர விநியோகம் செய்யப்படாமல் இருப்பது குறித்து, காரணம் கேட்டால் தண்ணீரை அனுப்பப் பயன்படும் ஜெனரேட்டருக்கு டீசல் இல்லை என அலட்சியமாகக் கூறி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் செயல்படாத ஜெனரேட்டருக்கு காலிக்குடங்களுடன் வந்து மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஊராட்சி அலுவலர், வருவாய்த்துறையினர் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி, பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.