நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் - கரோனா
மதுரை: கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், மதுரை அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட்டுக்கொளள பொதுமக்கள் ஆரவமுடன் செல்கின்றனர்.
Public interest in corona vaccination
இந்நிலையில், தடுப்பூசி போட்டு கொள்வதில் பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மதுரை அரசு மருத்துவனைக்கு ஏராளமானோர் இன்று வந்திருந்தனர்.
முதல் தடவை தடுப்பூசி போடுபவர்களும், இரண்டாம் தடவை தடுப்பூசி போடுபவர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து மருத்துவமனைகளில் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டனர். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் சுமார் 110 பேர் நேற்றும் இன்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.