தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

வெள்ளாற்றில் மணல் திருட்டு, பொதுமக்கள் குற்றச்சாட்டு - அரியலூர் மாவட்டம் செந்துறை

அரியலூர்: வெள்ளாற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளாற்றில் மணல் திருட்டு பொது மக்கள் குற்றச்சாட்டு
வெள்ளாற்றில் மணல் திருட்டு பொது மக்கள் குற்றச்சாட்டு

By

Published : Jul 2, 2020, 12:58 PM IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கோட்டைக்காடு என்ற இடத்தில் வெள்ளாற்றில் அரியலூர் மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் உயர்மட்ட பாலம் கட்டும் பணி 11 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தப் பாலம் கட்டப்பட்டால் அரியலூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும்.

இந்நிலையில் பாலத்திற்கு அருகே வெள்ளாற்றில் மணல் திருட்டு நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இதனால், ஆங்காங்கே பள்ளம் பள்ளமாக காட்சியளிக்கின்றது. மேலும், வெள்ளாற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவது தெரியவந்துள்ளது.

இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து மணல் திருட்டில் ஈடுபடுபம் சமூக விரோதிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்டாலின் முயற்சியில் இணைந்த ரஜினிக்கு நன்றி'- உதயநிதி ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details