தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / briefs

இமானுவேல் சேகரின் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை...! - Ramanathapuram Collector Veera ragava Rao Press Release

ராமநாதபுரம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக இமானுவேல் சேகரின் நினைவிடத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Public ban on paying tribute at Emanuel Seker Memorial
Public ban on paying tribute at Emanuel Seker Memorial

By

Published : Sep 3, 2020, 8:31 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ஆம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இங்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு காரோனா ஊரடங்கு காரணமாக எவ்வாறு நடத்தலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சார் ஆட்சியர் சுகப்புத்ரா உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் ஆட்சியர் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து 11.09.2020 அன்று பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வருவதற்கு அனுமதி இல்லை.

பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு (5 பேருக்கு மிகாமல்) மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி, வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி தகுந்த இடைவெளியை கடைபிடித்து மரியாதை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று அஞ்சலி செலுத்துவதற்கு வருபவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும். அனுமதி பெற விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள் 7ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். பொது இடங்களிலும் படம் வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details